ஈரோடு அரசு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் சூளுரை…
திட்டப் பணிகளை துவக்கி வைத்தும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..
ஈரோடு. ந, வ. 27
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியம் விழா பேருரை ஆற்றினார். அப்பொழுது தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் ஆணவம் விரைவில் அடக்கப்படும் என்று சூளுரைத்தார்.
கடந்த நவம்பர் 25ஆம் தேதி கோவை வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அங்கு செம்மொழி பூங்காவை திறந்து, தொழில் துறை சார்பில் தொழில் நிறுவனங்களில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து அங்கிருந்து ஈரோட்டிற்கு வருகை புரிந்த அவருக்கு ஈரோடு மாவட்ட திமுக சார்பிலும், இளைஞரணி சார்பிலும் சிறப்பான வரவேற்பு விஜயமங்கலம் சுங்க சாவடி அருகே அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் இரவு ஓய்வெடுத்தார்.
நேற்று காலை நவம்பர் 26ம் தேதி 9 மணி அளவில் மொடக்குறிச்சி வட்டம் அரச்சலூர் வடுகப்பட்டி அருகே உள்ள ஜெயராமபுரத்தில் 4.90 லட்சம் ரூபாய் கட்டப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் திருஉருவ சிலையுடன் அமைக்கப்பட்ட நினைவு அரங்கத்தினை திறந்து வைத்தார். பின்னர் அரை கிலோ ஓடா நிலையில் அமைந்துள்ள இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. பின்னர் அந்த மணி மண்டப வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தீரன் சின்னமலையின் குதிரை வீரன் போன்று அமைக்கப்பட இருக்கும் திருஉருவ சிலைக்கு ஆடிக்கல் நாட்டினார்.
பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் காலை 11:30 மணியளவில் சோலார் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த விழா மேடைக்கு வந்தார். அங்கு பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும். ஆறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு ஆடிக்கல் நாட்டில் விழா பேருரை ஆற்றினார்.


அப்போது அவர் பேசியதாவது..
இன்றைய தினமும் தமிழ்நாட்டில் இன்றைய நவீன தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு அடித்தளமான தந்தை பெரியாரைத் தந்த இந்த ஈரோட்டிற்கு திராவிட இயக்கத்தின் முதன்மை தொண்டனான நான் பெருமையோடு இங்கே வந்திருக்கின்றேன்.
ஈரோடு பூகம்பம் தந்தை பெரியார் இல்லை என்றால் திராவிட இயக்கம் இல்லை. பேரறிஞர் அண்ணா இல்லை. முத்தமிழர் கலைஞர் இல்லை. ஏன் தமிழ்நாட்டிற்கு இந்த அளவிற்கு வளர்ச்சியும் இருந்திருக்காது.
இந்த ஈரோட்டை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இது மஞ்சள் நகரம், சந்தன நகரம், தொழில் நகரம், ஜவுளி நகரம், இயற்கை நகரம், விடுதலை வீரர்களை தந்த நகரம் எத்தகைய பெருமைமிகு ஈரோட்டில் இந்த அரசு விழாவில் சிறப்பாக, மிகுந்த சிறப்போடு விழாவை ஏற்பாடு செய்திருக்கிற நம்முடைய கழகத்திற்கு கிடைத்த நல்ல முத்து மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி, அமைதியானவர் அடக்கமானவர் அதே நேரத்தில் ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிப்பதில்.
இரண்டே வரிகளில் சொல்ல வேண்டுமென்றால், அனுபவத்தால் மூத்தவர், உழைப்பினால் இளைஞர்.
நிகழ்ச்சியை மாபெரும் மாபெரும் மானத்தை போல ஏற்பாடு செய்திருக்கின்ற அவருக்கும் அவருக்கு அவருக்கு துணை நிற்கும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ். கந்தசாமி அவர்களுக்கும் அது போல மாவட்டத்தின் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள.
இந்த மோதிரம் விழாவில் இந்த மாபெரும் விழாவில் 91 கோடியை 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் 235 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ஒரு லட்சத்தி 84 ஆயிரத்து 491 பேருக்கு, ரூபாய் 2578 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்குவதும் என்று, 605 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு இன்றைக்கு எனக்கு கிடைத்துள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள என்னிடம் தேதி கேட்டபோது கடந்த ஆண்டு மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில் பொள்ளாச்சி மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் நான் அறிவித்த 12 அறிவிப்புகளில் நிலைபாடு நிலை என்னவென்று கேட்டேன். அதிகாரிகள் என்னிடம் பகிர்ந்து கொண்ட விவரங்கள் அறிவிப்புகள் எல்லாம் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றது.
குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில், 106.78 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தேன். அதில் 79 புள்ளி 83 கிலோமீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டு மீதம் உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதம் பத்தாம் தேதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட.
பொறுத்த வரைக்கும் என்னை பொறுத்தவரைக்கும் இந்த விழாவுக்கு வந்தோம் அறிவித்தோம் என்று. அத்தனை அறிவிப்புகளையும் செயல்படுத்தி காட்டக்கூடிய அரசு தான் நம்முடைய திராவிட மாடல்.
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் ஈரோடு மாவட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் செய்து தரப்பட்டுள்ள திட்டங்களை சொல்வதாக இருந்தால் அதற்கு ரிய மூன்று மணி நேரம் ஆகும், தலைப்புச் செய்தியாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு.
ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தை திறந்து வைத்து. ஜெயராமபுரத்தில் மாவீரன் கொல்லான் அவர்களுக்கு முழு தெருவுருவ சேலையுடன் அரங்கம் அமைத்து அதை திறந்து வைத்துவிட்டு இங்கு வந்துள்ளேன்.
ஈரோடு வட்டம் கங்காபுரம் கிராமத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. குரங்குலமும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மூலம் ஈரோட்டில் மஞ்சள் பொது வசதி மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அரசு சுகாதார நிலையங்களில் இதுவரை 8 கோடி 13 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு. கலைஞர் நகர் பெற கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 195 உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 1 77 பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு. கொண்டுவரப்பட்டிருக்கிறது.
மீதமுள்ள 18 பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஈரோடு கோபிசெட்டிபாளையம் சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய நான்கு இடங்களில் அறிவு சார்ந்த மையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு திட்டங்களின் கீழ் கடந்த நான்கரை ஆண்டுகளில் 944 கிலோமீட்டர் நீளமுள்ள சாலை பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு.
17 ஊரகப் பாலங்கள், 73 நெடுஞ்சாலை பாலங்கள் அமைக்கப்பட்டு. ஈரோடு மண்டலத்தில் நானூறு திருக்கோயில்களில், 154 பணிகள் நடைபெற்று. 850 திருக்கோயில்களில் 150 திருக்கோவில்களில் 218 பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த காலத்தில் நான்கரை ஆண்டு காலத்தில் 133 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டு.
சத்தியமங்கலம் கோபால் குளிர் ஏற்றும் நிலைய வளாகத்தில், கத்து ஊறுகாய்புல் தயாரிக்கும் அளவு அமைக்கப்பட்டு. கரட்டுபாளையத்தில் விடுதியுடன் கூடிய ஜிம்னாஸ்டிக் அரங்கம் எட்டு மணி நிறைவுற்று துவங்க.
நம்முடைய திராவிட மாடல் அரசி நம்முடைய திராவிட மாடல் அரசின் இத்தகைய முத்திரை திட்டங்களா இந்த ஈரோடு மாவட்டத்தில் மட்டும் எத்தனை பேர் பயன் அடைந்து உள்ளார்கள் என்பது தெரியுமா, நான் பெருமையோடு சொல்கிறேன் 4,9, 3 54 குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை. விடுபட்ட மீதமுள்ளவர்களுக்கும்.
வரும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதுவும் வழங்கப்பட. நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
59 ஆயிரத்து 2562 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு.
51 ஆயிரத்து 70 சுய உதவி குழுக்களுக்கும், மூன்று ஆயிரத்தி எரநூத்தி மூணு கோடி ரூபாய்க்கு கடன் உதவி வழங்கப்பட்டு.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 8 லட்சத்தி 65 ஆயிரம் பேர் பயனடைந்து உள்ளனர்.
என்னுயிர் காப்போம், 48 திட்டத்தின் 9 ஆயிரத்து 2562 பேரும், உயிர்கள்.
5 ஆயிரத்து 865 பெண்கள். திருமண உதவி பெற்றுள்ளார்கள்.
12, 819 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 12, 819 தாய்மார்கள்.
காலை உணவு திட்டத்தால் 53 ஆயிரத்து 716 மாணவர்கள் பசி இல்லாமல். புதுமைப்பெண் திட்டத்தில் 48 ஆயிரத்தி 1801 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உயர்கல்வி உதவித்தொகை கிடைக்கிறது.
57 ஆயிரத்து 763 மாணவ மாணவிகளுக்கு மிதுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திற்கு மேலும் 5 புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதல்வர்.. புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு நாலு கோடியே 3 0 லட்சம் ரூபாய் செலவில், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு நான்கு கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டவும்.
பவானிசாகர் மற்றும் கீழ் பவானி நீர் பாசன திட்டத்தின் கீழ் திட்ட நிபந்தனையுடன் வழங்கப்பட்ட பட்டாக்களை நிரந்தர பட்டாவாக மாற்ற வேண்டும் என்ற சத்தியமங்கலம் நம்பியூர் பவானி கோபிசெட்டிபாளையம் மொடக்குறிச்சி கொடுமுடி பெருந்துறை மற்றும் ஈரோடு ஆகிய வட்டங்களை சேர்ந்த விவசாயிகளை கோரிக்கைகளை ஏற்று இந்த 90 கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பட்டாக்கள் நிரந்தர பட்டாவாக மாற்றப்படும்.
அந்தியூர் அருகே உள்ள தோனி மடுவு பள்ளத்தில் குறுக்கே நான்கு கோடி ரூபாய் செலவில் புதிய திருப்பனை.
முக்கியமாக சாயப்பட்டறை கழிவுகளால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்று பாசன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக உள்ள பல்வேறு வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களை தீர்ப்பது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும்.
பெருந்துறையில் தற்போது உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு 5 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும்.
என்ன மங்கலம் வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களுக்கான பதிவேடுகளில் உள்ள நிபந்தனை பட்டாக்கள் அயன் பட்டாக்களாக மாற்றப்படும்.
இப்படி நாம் தெரிந்தவரும் இவ்வாறு நாம் தினந்தோறும் தொடர் திட்டங்களை செயல்படுத்தி வருவதால் தான் எதிர்க்கட்சிகள் என்ன சொல்வது என்று தெரியாமல் விரக்தியில் பெருமை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு ஈரோட்டில் நான் பேசும் பொழுது, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டதோடு தமிழ்நாட்டின் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட பால்வளத் தந்தை பரமசிவம் ஐயா அவர்களின் திருவுருவ சிலை ஈரோடு பால்பண்ணையில் நிறுவப்படும் என்று அறிவித்தேன். விவசாய குடும்பங்களின் வருவாயை ஏற்க பால் விநியோக முறையை நவீனப்படுத்த அர்ப்பணிப்புடன்.. பாடுபட்டவர் அவர்.
தன்னை ஒரு மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த மண்டலத்திற்கு இதுபோன்ற செயல்களை செய்து. உள்ளாரா என்று நான். கேட்கவில்லை. காரணம் அவர் செய்தது பூரம் துரோகம் தான். பச்சைத்துண்டை அணிந்து கொண்டு தமிழ்நாடு விவசாயிகளுக்கு பழனிசாமி அவர்கள் பச்சை துரோகம் செய்கிறார்.
மேலும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்காக பிரதமரை சந்திக்க செல்வதாக எடப்பாடி பழனிச்சாமி சொன்னால் அவருக்காக குளு குளு வசதி கொண்ட வேர்க்காத கார் ஒன்றை ஏற்பாடு செய்து தருகிறேன். முகத்தில் துணி மூடிக் கொண்டு சென்று பார்ப்பதெல்லாம் வெறும் வெளி வேஷம்.
அதேபோல் மதுரை கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய அனுமதியை வழங்காமல் அந்த மாநகர மக்களுக்கு துரோகம். இளைத்துள்ளது.
அதை நேரம் கோவை பாஜக எம்எல்ஏ ஒருவர் பாஜகவிற்கு தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை என்ற ஒரு காரணத்திற்காக அந்த மக்களுக்கு எந்த நலத்திட்டமும் மத்திய அரசு செய்யாது என்று வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலம். தந்துள்ளார்.
அதே நேரம் பாஜகவின் கைக்கூலியாக செயல்படும் நபர் ஒருவர் தமிழ்நாட்டில் உள்ளார் அவர்தான் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர் என் ரவி. வட மாநிலங்களில் பல்வேறு தீவிரவாத தாக்குதல் நடந்த போது தமிழ்நாட்டிலிருந்து நிதி வழங்கி. உள்ளோம்.
அதே நேரம் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாஜகவின் எடுபுடியாக இருந்து கொண்டு தமிழக மக்களையும் தமிழ் மொழியையும் இணைவாக பேசும் ஆளுநர் ஆர் என் ரவியின் ஆணவம் அடக்கப்படும். தேசப்பற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழகத்தை தீவிரவாதத்தை ஆதரிப்பதாக ஆறென்றவை ஆணவத்தோடு பேசி உள்ளார் அவருடைய ஆணவம் விரைவில். அடக்கப்படும்.
தமிழக மக்கள் ஆங்கிலம் பேசுவது யார் என்றைக்கு. எங்களுக்கு தேவை என்ற முறையில் ஆங்கிலத்தை நாங்கள் இன்னும் எங்கள் பிள்ளைகள் ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் படிப்பார்கள். இதில் ஆர் என் ரவிக்கு என்ன வந்தது. அதில் அவருக்கு என்ன எரிச்சல் உள்ளது.
வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் உங்கள் அனைவரின் பேராதரவோடு 2.0 திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும்.
இவ்வாறு ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சு. முத்துசாமி, கே என் நேரு, ஏ வா வேலு, வெள்ளகோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், திருப்பூர் சுப்புராயன், ஈரோடு கே இ பிரகாஷ், எம் எல் ஏக்கள் வி சி சந்திரகுமார், அந்தியூர் வெங்கடாசலம், ஈரோடு மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம், மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு என்டி வெங்கடாசலம், ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More Stories
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்ஆர் எல் வெங்கட்ராமன் வெளியிட்டார்.
கொங்கு மண்டலத்தில் ஹாட் டாப்பிக் – சேலம் தவெக மீட்டிங்கில் செங்கோட்டையனுக்கு அவமரியாதையா!?.
பாரதிய ஜனதா கட்சி பிரச்சார பிரிவு சேலம் பெருங்கோட்டம் நடத்தும் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.