February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மருத்துவர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு!!

நவ-26
திருப்பூர் அவிநாசி சாலை பகுதியைச் சேர்ந்தவர். செந்தில்குமார்,சங்கீதா தம்பதியினர் இவர்கள் இருவரும் மருத்துவராக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அவிநாசி சாலையில் தீபா மருத்துவமனை மற்றும் ஆதார் அறக்கட்டளை என்ற பெயரில் மருத்துவர்களை இணைத்து அறக்கட்டளைகளை நிறுவி கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வருகின்றார்.

இந்நிலையில் திருப்பூர் ஆசாத் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் குடும்பத்துடன் செந்தில்குமார், சங்கீதா தம்பதியினர் மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த பொழுது ராஜேந்திரன் செந்தில் குமார் மற்றும் சங்கீதா தம்பதியினரை அணுகி தனது மகள் சுகந்தி பெயரில் இலவசமாக மருத்துவ சேவை துவங்க வேண்டும் இதற்கு தனக்கு சொந்தமான நிலம் திருப்பூர் ஆசாத் வீதியில் உள்ளது என்றும் அந்த நிலத்தில் தாங்கள் நடத்தி வரும் அறக்கட்டளையுடன் இணைந்து மருத்துவ மனையை நடத்த விருப்பம் உள்ளதாக கூறினார்.
அதன்படி மேற்படி இடத்தில் ஆதார் இண்டெகரேட்டட் மெடிக்கல் அண்ட் சோசியல் சர்வீஸ் என்ற புதிய மருத்துவமனை கட்டப்பட்டது.
இதனை நிர்வகிக்க ராஜேந்திரனை அறங்காவலராக இணைத்துள்ளனர்.
மேலும் சுகந்தி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தொடங்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ராஜேந்திரன் மற்றும் சிலர் தானமாக கொடுத்த நிலத்தை தாங்கள் ஏமாற்றி பெற்றதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் தானமாக கொடுத்த நிலத்தை சிலர் இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாகவும் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர் செந்தில்குமார் மற்றும் சங்கீதா மற்றும் மருத்துவ குழுவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp