February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

Flash News

இரண்டு சமூகத்திற்கும் ஒரே ஜாதி பெயர் வைக்க கோரிக்கை…

குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர் சந்திரசேகரன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை…

ஈரோடு,நவ. 12

தமிழக முதல்வருக்கு அனுப்பி உள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,..

தமிழ்நாட்டில் வாழும் சுமார் 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட போர்வீக பழங்குடி இனமான குறவர் சமூகம் சார்பாக இந்த மனுவை தங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

குறவர் சமூகம் மற்றும் நரிக்குறவர் சமூகம் இரண்டும் ஒன்று அல்ல. நாடார், யாதவர், பள்ளர், பறையர் எவ்வாறு வெவ்வேறு சமூகங்களோ அதுபோல் குறவர், நரிக்குறவர் ஆகிய இரண்டும் வெவ்வேறு சமூகம் ஆகும். இவர்களின் வரலாறு, சமுதாய அமைப்பு, பழக்கவழக்கம், கலாச்சாரம் வழிபாட்டு முறைகள் மற்றும் மொழி போன்றவை முற்றிலும் வேறுபட்டவை.

இந்த இனத்தைச் சேர்ந்த( குறவர் இனம் ) மலையும் மலை சார்ந்த இடங்களான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த பூர்வீக தமிழர் குடிகள் ஆவோம். தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டியலில் சீரியல் எண் 36 இல் குறவன் என குறிப்பிட்டுள்ளோம்.

நாங்கள் தமிழை தாய் மொழியாக கொண்ட மனித சமுதாயத்தின் முதல் குடி * மூத்த குடி என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரர்கள் ஆகும். தமிழர் கடவுள் முருகப்பெருமானின் மனைவி குற மகள் வள்ளி எங்களது குறவர் இனத்தை சேர்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்களில் இருந்து ( சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி, ( பெரியபுராணம் ) திரிகூட ராசப்ப கவிராயர், பதினெட்டாம் நூற்றாண்டில் படைத்த சிற்றிலக்கியங்கள் நூல் குற்றாலக் குறவஞ்சி வரை எங்கும் குறவர் சமூகத்தின் தனித்துவ அடையாளம் விளக்கப்பட்டுள்ளது. நாங்கள் குன்றுகளில்( மலை சார்ந்த இடங்களில் ) வாழ்ந்து வந்ததால் குன்றவர் என அழைக்கப்பட்டு பின்னர் அந்த சொல்லில் இருந்து என மறுவி குறவர் என பெயர் நிலைத்தது.

குஜராத் மகாராஷ்டிரா குஜராத் மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களில் இருந்து வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்து தமிழகத்தில் கொடியேறியவர்கள் ஆவார்கள். இவர்கள் 2022 இல் அட்டவணை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். நரிக்குறவர் நாடோடி தன்மை கொண்ட அலைகுடி சமூகமாகும் இவர்களின் பூர்வீகம் தமிழகம் அல்ல இவர்கள் மலைவாழ் மக்களும் அல்ல. வேறு மாநிலங்களில் இருந்து வாழ்வாதாரம் தேடி தமிழகத்திற்கு வந்த இடம் பெயர்ந்தோர் ஆவார். வேறு மாநிலங்களில் அக்கி பிக்கி, நக்கலேஷ், வாக்கிரி வாலா போன்ற பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர் தமிழகத்தில் இவர்களுக்கு குருவிக்காரர் என்ற பெயர் உண்டு. நாள் 1957 முதல் இவர்களுக்கு நரிக்குறவர் என்ற பெயர் வழங்கப்பட்டது. நரிக்குறவர் என்ற அந்தப் பெயர் எவ்வாறு குருவிக்காரர் மக்களுக்கு வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை.

இவ்வாறாக குறவர் என்பவர்கள் தமிழக மண்ணில் பூர்வீக குடிகள் ஆவர். நரிக்குறவர்கள் வேறு மாநிலத்தில் இருந்து, இங்கு வந்து. இரண்டும் வெவ்வேறான ஒன்றுக்கு ஒன்று எந்தவித தொடர்பும் இல்லாமல் இரு வேறு. ஜாதிகள் ஆகும்.

ஆனால் இந்த அடிப்படையான உண்மை விவரங்கள் அறியாத அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் பொதுவெளியில் இந்த இரண்டு சமூகங்களையும் இணைத்தே பேசுகிறார்கள். நரிக்குறவர் என்ற பெயரில் குறவர் என்ற சொல் பின் ஒட்டக இணைந்து இருப்பதால் அரசு அலுவலர்களும், அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் பொதுமக்களும் குழப்பம் அடைகிறார்கள். இதனால் இந்த இரண்டு பிரிவினரும் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போது சரியான சான்றிதழ் வழங்குவதில் குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்படுகிறது. குறவன் என சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போது இந்த விண்ணப்பதாரர் நரிக்குறவராக இருப்பாரோ என்று சந்தேகிக்கின்றனர்.

அதேபோல் நரிக்குறவர் என்று விண்ணப்பித்தால் இவர் குறவராக இருப்பாரோ இவருக்கு எப்படி எஸ் டி சான்றிதழ் வழங்குவது..? என்று அரசு அலுவலகங்களில் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதனால் காலப்போக்கில் இங்கு தமிழகத்தில் பூர்வீகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அசல் குறவர் இன மக்களின் சமூக அடையாளம் மிகவும் பாதிக்கப்படுகிறது. குறவர், நரிக்குறவர் இரண்டும் ஒன்றே என்ற நிலை. அதை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒரே பெயரில் இரண்டு சாதிகள் இருக்க முடியாது, ஆனால் இங்கு இரண்டு வெவ்வேறு சாதியினர் ஒரே பெயரை கொண்டுள்ளனர்.

குறவர் என்ற பெயர் நரிக்காரர் மக்களுக்கு இணைப்பு பெயராக கொடுக்கப்பட்டு ( நரி+ குறவர்) என்று அழைக்கப்படுகிறார்கள். 1957-ல் நடந்த இந்த தவறு இன்னும் சரி செய்யப்படாமல் ஒவ்வொரு அரசும் கடந்து செல்கிறது.

பார்வையில் கண்ட தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், அரசாணை என்.,. 6..11/1/2011 மூலம் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் இரண்டும் இரண்டும் ஒரே சமூகம் என ஊர்ஜிதம் ஆகியுள்ளது எனவே அவர்கள் குருவிக்காரர் என்பே அழைக்கப்படலாம். இதனால் அவர்களுக்கு எந்த உரிமை இழப்பும் கிடையாது. அவர்கள் எஸ்டி சான்றிதழ் பெறுவதிலும் எந்த சிக்கலும் இல்லை. குருவிக்காரர் என்று அழைக்கப்படுவதில் அவர்களுக்கும் எந்தவித மாறுபட்ட கருத்தும் இருக்க வாய்ப்பு இல்லை. அதே சமயம் எங்கள் குறவன் சமூகமும் தமது அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்.

ஆகையால் தமிழக முதல்வர் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, மேற்படி அரசாணையில் காட்டப்பட்டுள்ள நரிக்குறவர் என்ற பெயரை நீக்கி அவர்களை குருவிக்காரர் என அழைக்க அனுமதித்து உத்தரவு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்த செயல்பாடு மூலமாக செயல்பாடு மூலமாக எங்கள் குறவன் சமூகத்தின் அடையாளத்தை பாதுகாக்கும் விதமாக அமைய சமூக நீதி அரசு, நீதி வழங்கி எங்களுக்கான சமூக நீதியை உறுதிப்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு தமிழ்நாடு குறிஞ்சியர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர் சந்திரசேகரன் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp