கள்ளக்குறிச்சி நவ 11
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்த குறைதீர் கூட்டத்தில் சங்கராபுரம் பகுதியைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகநாதன் என்பவர் போஸ்டருடன் மனு கொடுக்க வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை கண்டு பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த போலீசார் விசாரித்த போது அவர் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மூலம் மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தில் பதிவு செய்து பாரத ஸ்டேட் வங்கி சங்கராபுரம் கிளையில் கடன் பெற்று கள்ளக்குறிச்சியில் இயங்கி வந்த தீபம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் UPCOT EV MOTORS நிறுவனத்தின் E எலக்ட்ரிக் சாரதி ஆட்டோ வாங்கியுள்ளார்.
இந்த ஆட்டோ வாங்கிய நாள் முதலே சரியான முறையில் இயங்காமல் பழுதடைந்த நிலையில் இருந்தது இதனால் ஆட்டோ ஓட்டுனர் லோகநாதன் விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தின் முறையிட்டார். இதன் மூலம் 12/7/2024 அன்று ஆட்டோ ஓட்டுநருக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து. அந்த தீர்ப்பில் சம்பந்தப்பட்ட ஆட்டோ வாகனத்தை முழுமையாக சரி செய்து சிறந்த முறையில் இயங்கும் தன்மையில் ஒப்படைக்க வேண்டும் அல்லது புதிய வாகனம் தர வேண்டும் என நுகர்வோர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. இழப்பு தொகை ரூபாய் ஒரு லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எந்தவித நடைமுறையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.
ஆகவே அதே ஆணையத்தில் 28.03.2025 அன்று நிறைவேற்றுதல் மனு (EA 16/2025)
தாக்கல் செய்து நுகர்வோர் ஆணையம் எதிர்மறை தரப்புக்கு பிடிவாரண்ட் சம்மன் அனுப்பிய நிலையிலும், காவல் துறையினர் இது நாள் வரை UPCOT EV motors ஆட்டோ நிறுவனத்தாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் உள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி ஆட்டோ ஓட்டுநரிடம் இருந்து பழுதடைந்த ஆட்டோவை பெற்றுக் கொண்டனர் . ஆனால் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் ஆட்டோ தொழிலாளியிடம் மாத தவணை கட்ட வேண்டும் என்று நெருக்கடியில் ஆளாக்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு இத்தனை நாட்கள் வருமானம் இழந்து வாழ்க்கை வாழ்வதால் சாவதா என்ற நிலைக்கு மேற்கண்ட ஆட்டோ டீலர்கள் மற்றும் நிறுவனங்கள் என்னை தள்ளி விட்டார்கள் என தெரிவித்தார். நீதிமன்றம் உத்தரவு வழங்கி 16 மாதங்கள் ஆகியும் இதுநாள் வரை மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காமல் ஆட்டோ ஓட்டுநரை அலையவிடும் அவல நிலை இருந்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர் இடமும் கடந்த மூன்று மாதங்களாக மனு அளித்து நிலையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கதா காரணத்தினால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இன்று போஸ்டர் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
குறிஞ்சிப்பை வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிலைகள் ஊர்வலம்
புதுச்சேரியில் சங்கமம்: பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நெட்வொர்க் அசோசியேஷன் மாநாடு!