*ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு..!*வந்தவாசி, ஜூன் 29:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் உற்சவ மூர்த்திகள் மேளதாளத்துடன் கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

More Stories
புதுச்சேரி,முதலியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அவதார தினத்தை முன்னிட்டு ஸ்தர்சன ஜெயந்தி உற்சவம் நடைபெற்றது
தெய்யார் கிராமத்தில் பஞ்ச கருடசேவை வைபவம்..!
முதல்வர் பிறந்தநாளையொட்டி தங்கத் தேர் இழுத்து வழிபாடு..!