விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம்,செக்கடிக்குப்பம் கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் CM.ராஜதுரை.BA கலந்துகொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
மத்தூரில் போலியோ சொட்டு மருந்து தட்டுப்பாடு:
தேசிய போலியோ சிறப்பு முகாம்!!