June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை எம்.எல்.ஏ. ரா.கதிரவன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்

மணப்பாறை, ஜூன் 27:

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை நகராட்சி பகுதிகளில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சாரத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா. கதிரவன் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மணப்பாறை தெற்கு நகர கழக செயலாளர் அழகர் தலைமையில் நடைபெற்ற இந்த நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சி மஞ்சம்பட்டி, செவலூர், வெள்ளக்கல், தீராம்பட்டி உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் நடைபெற்றது. அப்போது வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்த ரா. கதிரவன், தமக்கு அளித்த ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

மேலும், தேர்தலில் அளிக்கப்பட்ட மகத்தான வெற்றியை மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்பதாகவும், சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த நன்றி தெரிவிப்பு பிரச்சாரத்தில் மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ஏ. தினேஷ், மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜில்லா குமார், மாவட்ட இளைஞரணி நிர்வாகி வையம்பட்டி பரணிதரன் வையம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் ரா. கதிரவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, தொகுதி வளர்ச்சிக்கான தங்களது கோரிக்கைகளையும் மனுக்களாக வழங்கினர். அவற்றை விரைந்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.