September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

காலாப்பட்டு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் (எ) ரமேஷ், புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து மக்கள் பணியை தொடங்கினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செந்தில், சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.விழாவில் தொகுதி பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் வந்த செந்தில், ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் மற்றும் மனுக்களை பெற்று மக்கள் பணியை தொடங்கினார்.

தொடர்ந்து தொகுதி மக்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்….