வந்தவாசி, ஜூன் 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா(தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா, கண்ணதாசன் 99 ஆவது பிறந்த நாள் விழா, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா) தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை(பொ) பூ.மீனாட்சி, புலவர் ந.பானு, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் எ.சக்திவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் சங்கத் துணைத் தலைவர் பா.சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப.குப்பன் பங்கேற்று, தமிழ் இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து, காலத்தை வென்ற கண்ணதாசன் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் தமிழ் சங்க நிர்வாகி இரா.அருண்குமார் தமிழிசை பாடல்களை பாடினார். பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் பட்டதாரி ஆசிரியை கலையரசி, முத்துப்பாண்டி, தரணி குமாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஆங்கில ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது