கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:- கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு ஒகே-னக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக காவிரி ஆற்றின் மூலம் நீரில் ஏற்பட்டு உள்ள நீர் தர மாற்றம் மற்றும் பச்சை நிறத்தால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களில், கூடுதல் சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டு உள்ளன. பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்கும் நோக்கில், நீர் தர கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. தற்-போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு குடிநீர் சுத்தி கரிப்பு செயல்முறைகளை முழுமை-யாக மேற்கொள்ள, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் வழக்கமாக வழங்கும் குடிநீர் அளவில், தற்காலிகமாக, 50 சதவீதம் மட்டுமே வினியோகம் செய்ய இயலும். எனவே பொதுமக்கள், குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி, தேவையற்று வீணாவதை தவிர்த்து, சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் குடிநீர் வினியோகம் இயல்பு நிலைக்கு திரும்பு

More Stories
பெளத்தூர் கிராமத்தில் சூதாட்டக் கும்பல் கைது – ரூ.17 லட்சம் பணம், செல்போன்கள், வாகனங்கள் பறிமுதல்
*புதுச்சேரியில் பாரிஸ் அயலக மறைப்பரப்புச் சபையின் 250-வது ஆண்டு நிறைவு விழா!