June 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…

360 மனுக்கள் வரப்பெற்ற நிலையில் மேல் நடவடிக்கைக்கு உத்தரவு.

ஈரோடு. ஜூன். 23

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் 360 மனுக்கள் வரப்பெற்றது. உரிய மேல் நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாரந்தோறும் திங்கட்கிழமை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

எந்த வகையில் நேற்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர்சு. சாந்தகுமார் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுவாக எழுதி வந்து தங்களின் கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, விதவைகள் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட நிவாரணத் தொகை மற்றும் இலவச வீட்டு மனை பட்டா, இலவச வீட்டு மனை, கல்வி உதவி தொகை கோருதல், தங்கள் பகுதிகளில் உள்ள, குடிநீர், சாலை வசதி, சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரியும் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

மேலும் காவல் நிலையங்களில் உள்ள புகார் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 360 மனுக்கள் வரப்பெற்ற நிலையில், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்களுக்கான நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இடத்தில் சம்பந்தப்பட்ட குறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.