June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி குழு கூட்டம் தோழர் அ. ஆறுமுகம் தலைமையில் குடியிருப்பு பாளையம் ஆனந்தவள்ளிஇல்லத்தில் 22. 6 2026 திங்கள் கிழமை 10.00 மணி அளவில் நடைபெற்றது தொகுதி குழு கூட்டத்தில் மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும் சுப்பையா நகர் கிளை உறுப்பினர் மீனாட்சி அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுநடைபெற்ற வேலைஅறிக்கை ஏம்பலம் தொகுதி செயலாளர் அ.பெருமாள் வாசித்தார் நடைபெற்ற வேலை அறிக்கையின் மீது விவாதத்தில் தோழர் பக்தவச்சலம் தோழர் ஆறுமுகம் கிருஷ்ணமூர்த்தி தோழியர்சுமதி தோழர் நாராயணசாமிதோழர் கணபதிவிவாதத்தில் பங்கு எடுத்துக் கொண்டனர் எதிர்கால கடமைகளைப் பற்றிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி செயலாளரரும் புதுச்சேரி மாநில குழு உறுப்பினரும்மமான தோழர் அ. பெருமாள் விளக்க உரையாற்றினார் தொகுதி கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்குமுழு ஆதரவு கொடுத்துவெற்றி பெற செய்வதற்கு ஏம்பலம் தொகுதி முழு முயற்சியில் ஈடுபடும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து ஜூலை கடைசி வாரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெறுகின்ற கம்யூனிஸ்ட் கட்சி தத்துவார்த்த பயிற்சி முகாமில் ஐந்து தோழர்கள் பங்கேற்பது சேலியமேடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் 30 ஆண்டு காலமாக நடத்தாமல் உள்ள தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏம்பலம் தொகுதி குழு சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது இச்செய்தியினை தங்களுடைய நாளேடுகளில் வெளியிடுமாறு உங்களை தோழர்களுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏம்பலம் தொகுதி செயலாளர் அ பெருமாள் 94430 78 917