June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நான் மந்திரிதான்.. ஆனாலும் அப்பா ரூ.3000 சம்பளத்துக்கு வேலைக்கு போகிறார்!

கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த இந்து சமய அறநிலையத்துறை மந்திரி ரமேஷ், தான் மந்திரியான பின்னரும், தனது தந்தை மாதம் ரூ.3000 வேலைக்கு செல்வதாக உருக்கமாக கூறியிருக்கிறார்.

அரசியல் என்பது செல்டில் ஆவதற்கான ஒரு குறுக்கு வழி என்று அனைவரும் பார்க்கும் நேரத்தில், மந்திரி ரமேஷின் பேச்சு, மாணவர்களிடையே புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ரமேஷ் என்ன பேசினார் என்பதை பார்ப்போம்.

“என் வாழ்க்கை பயணம் கொஞ்சம் வித்தியாசமானது. நான் 12வதில் படித்தது பயாலஜி குரூப். ஆனா காலேஜ் வரும்போது மெக்கானிக்கல் என்ஜினியரிங் குரூப் எடுத்தேன். அப்புறம் காலேஜ் முடிச்சிட்டு, வேலை பார்த்தது ஆஸ்பிட்டல் அட்மினிஸ்டேஷன்ல.. இப்போ மந்திரியாக இருக்கிறேன். கல்வி என்பது அறிவு. ஒரு குறிப்பிட்ட சப்ஜெட்டை படிக்கிறோம், அதில் நம்மை திறம்பட கொண்டு போகிறோம் என்பதுதான் கல்வி.

இந்த கல்வியை அடிப்படையாக கொண்டுதான் நம்முடைய சிந்தனை தொடங்கும். அந்த சிந்தனை, சமூகத்தை நோக்கி மாறும்போது.. இலக்கு எதுவாக இருந்தாலும் அதை நோக்கி ஓடும்போது நிச்சயம் வெற்றிப்பெற முடியும். நானும் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன்தான். எனக்கு என அரசியல் பின்புலம், பணம், பதவி கிடையாது.

இன்று நான் மந்திரியாக இருக்கிறேன். ஆனால் அப்படியென்றால் என்னவென்றே எனது அம்மாவுக்கு தெரியாது. இன்றைய தேதியிலும் அவர் மாத ஊதியத்திற்கு வேலைக்குதான் போகிறார். நான் மினிஸ்டராகிவிட்டேன் வேலையை விட்டுடுங்க என்று சொன்னேன்.. அதற்கு, என் சொந்த காலில் நான் கடைசி வரைக்கும் எவ்வளவு நாள் நிற்க முடியுமோ நின்னுக்குறேன். தேவை இருந்தா.. உன்கிட்ட வரேன் என்று சொல்லி, வேலையை விட மறுத்துவிட்டார்.

அப்பா, மாதம் ரூ.3000 ஊதியத்திற்கு வேலைக்கு போகிறார். என்னுடைய அண்ணன், தம்பி என எல்லோரும் வேலைக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள். மினிஸ்டர் ஆகிவிட்டேன் என்பதால், அவர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு, என்னுடன் வந்து இருக்கவில்லை. இப்படியான சூழலிலிருந்துதான் நான் வந்திருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

இன்னைக்கு சாதாரண கவுன்சிலராக போட்டியிட நினைப்பவர்களே, எங்கு எந்த காண்ட்ராக்டை பிடித்து காசு பார்க்க முடியும் என யோசிக்கிறார்கள். அப்படி இருக்கையில், மந்திரியான பின்னரும் அவருடைய பெற்றோர்கள், சகோதரர்கள் வேலைக்கு செல்கிறார்கள் எனில், அரசியல் என்பது காசு பார்ப்பதற்கான இடம் கிடையாது என்பதை, இந்து சமய அறநிலைத்துறை மந்திரியின் பேச்சு உணர்த்தியிருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.