September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

மருத்துவக் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் நோய் பரவும் அபாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

இந்த விவகாரத்தில் பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.