புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்.2026 கல்வியாண்டில்… 100% தேர்ச்சி பெற்றதற்கான பாராட்டு விழா மற்றும் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளுக்கு சிறப்பு செய்தல் மேலும் தனித்தனி பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாணவிகளுக்கு சிறப்பு செய்யும் விதமாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்நேயம் மக்கள் கழக தலைவருமான G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்…17.06.2026. இன்று விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.மேலும் 100% தேர்ச்சி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்த ஆசிரியர்களையும் மாணவிகளின் பெற்றோர்களையும் பாராட்டுவதாகவும் மேலும் இதுபோன்று ஆண்டாண்டுக்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டுமென ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்..மேலும் விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.கீதா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மேலும்நேயம் மக்கள் கழக பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!