கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகளுடன் பொதுமக்கள் வழங்கிய, 556 மனுக்களை பெற்று கொண்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், முதல்வர் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில், 9 மாற்றுத்திறனாளிகளுக்கு, 5.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான செயற்கை கால்களை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மற்றும் அனைத்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ரூ.5.57 லட்சத்தில் செயற்கை கால் வழங்கல்

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!