முழுக்க முழுக்க சட்ட விரோதமாக செயல்படும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சாயப்பட்டறை இடித்து அகற்றப்பட வேண்டும்…
நாமக்கல் ஆட்சியரிடம் பத்து ரூபாய் இயக்கத்தினர் புகார் மனு…
பள்ளிபாளையம். ஜூன். 10
பள்ளிபாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சாயக் கழிவுநீர் வெளியேற்றப்படும் விவகாரம் பூதாகரமாக உள்ள நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி கே ராஜீவ் ஆய்வு செய்த பின்பும் தொடரும் அவலம். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சாயப்பட்டறை முழுக்க முழுக்க விதிமுறைகளை மீறி செயல்படுவதால் அவற்றை முற்றிலுமாக இடித்து அகற்ற வேண்டும் என, பத்து ரூபாய் இயக்கத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாயப்பட்டறை மற்றும் சலவை பட்டறைகள் இயங்கி வருகின்றன. இதிலிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிப்பு செய்யப்படாத ரசாயனம் கலந்த சாயக்கழிவு நீர் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள நிலம் மற்றும் நீர்நிலைகளில் விடப்படுவதால், விவசாய நிலமும், நீர் வளங்களும் மற்றும் கால்நடைகளும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அதோடு இந்த சாயக்கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுவதால், காவிரி ஆற்று நீர் மாசடைந்து அதனை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் காவிரி ஆற்றில் உள்ள மீன்கள் ஆகியவை பெரிய விளைவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.
இந்த கொடுமை நேற்று இன்று இல்லை கடந்த சுமார் 20 ஆண்டுகளாக இந்த நிலை இருந்து வருகிறது.
இதற்கு ஒரு தீர்வை இத்தனை ஆண்டு காலம் இருந்த ஆட்சியாளர்களும் சரி, அதிகாரிகளும் சரி இந்த பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வையும் செய்யவில்லை.
மாறாக அவ்வப்போது ஆய்வு, இணைப்பு துண்டிப்பு, அபராதம் போன்ற கண்டடைப்பு நடவடிக்கைகளோடு தங்களை கவனிக்கும் எஜமானர்களுக்கு விசுவாசமாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இருந்து விடுகிறார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் புதியதாக ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வி. கே ராஜீவ் கடந்த வாரம் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட சில ஆலைகளுக்கு சீல் வைக்கவும், சில ஆலைகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கைகள் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை உரிமையாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பத்து ரூபாய் ஏக்கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதன் நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக சாயப்பட்டறை நடத்தி வருகிறார். அவரது சாயப்பட்டறை காவிரி ஆற்றில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. மேலும் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கொஞ்சம் கூட சுத்திகரிப்பு செய்யாத ரசாயன கலந்த, ரசாயன உப்பு கலந்த சாயக்கழிவு நீரை நகராட்சி கால்வாய் மூலம் நேரடியாக காவிரி ஆற்றில் விடுகிறார்.
கடந்த 20 ஆண்டு காலமாக ஒரு பெரிய அளவில் சாயப்பட்டறை நடத்தி பல நூறு கோடி ரூபாய் லாபம் சம்பாதித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, தொழில் போட்டியென கருதக்கூடிய மற்ற சாயப்பட்டறைகளை இடித்து அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக இவரின் சுயநலத்தால் பல சிறிய சாயப்பட்டறைகள் எடுத்து தரைமட்டமாக்கப்பட்டு அதனை நடத்தி வந்தவர்கள் இன்றைக்கு நடுத்தெருவில் நிற்கின்றார்கள்.
இவர் மட்டும் தன்னுடைய ஆட்சி மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சட்டவிரோதமாக சாயப்பட்டறை நடத்தி பல நூறு கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார்.
இப்படிப்பட்ட இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, சட்டமன்றத்தில் பள்ளிபாளையத்தில் உள்ள சாயப்பட்டறை கல்வி நீரால் புற்றுநோய் ஏற்பட்டு தன்னுடைய சகோதரி இறந்து விட்டார் என்று நீதி கண்ணீர் வடித்து அனுதாபத்தை தேடிக்கொண்டார். ஆனால் இவர் நடத்தும் சாயப்பட்டறையில் இருந்துதான் சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த சாயக் கழிவு நீர் நேரடியாக காவேரி ஆற்றில் விடப்படுகிறது.
தற்போது அவரது சாயப்பட்டறைக்கு மின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. இது கண்துடைப்பு நடவடிக்கை. எனவே மாவட்ட நிர்வாகமும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் சட்டவிரோதமாக செயல்படும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சாயப்பட்டறை முழுமையாக இடித்து அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பத்து ரூபாய் அமைப்பினர் நாமக்கல் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக பள்ளிபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறை உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.