September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம்

வந்தவாசி, ஜூன் 09:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட ஓய்வுபெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதியின் பாஞ்சாலி சபதம் என்ற தலைப்பில் புலவர் ஏ.ஏழுமலை பேசினார். மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் மேலாளர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு வங்கியின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை விளக்கினார். சங்க தலைவர் பொன்.ஜினகுமார், பொருளாளர் கோவிந்தசாமி, நிர்வாகிகள் காளத்தி, அசோக்குமார், கோபாலகிருஷ்ணன், .மாவட்ட கல்வி அலுவலர் ஓய்வு பாஸ்கர், தொடக்கக்:கல்வி அலுவலர் ஓய்வு முனியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க செயலாளர் நடராசன் நன்றி கூறினார்.