குறைகளையும்_ உடல் நலத்தையும் அக்கறையோடு விசாரித்த வேட்பாளருக்கு வாக்களிக்க முடிவு..
ஈரோடு. ஏப்ரல். 18

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி மதிமுக வேட்பாளர் சா. செந்தில்நாதன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது கிராம மக்களிடம் கனிவோடு குறைகளை கேட்டு நலம் விசாரித்ததால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து அடுத்த மாதம் மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து அவர்களும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள திமுகவுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஒன்றான மொடக்குறிச்சி தொகுதியில் சா. செந்தில்நாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் சா. செந்தில்நாதன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த கையோடு தீவிர தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவாக மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளான திமுக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தொகுதி முழுவதும் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மொடக்குறிச்சி தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மதிமுக வேட்பாளர் சா. செந்தில்நாதன் காலை ஆறு மணி முதல் இரவு 9:30 மணி வரை பல்வேறு இடங்களுக்கு சென்று உதயசூரன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார்.
அதன்படி நேற்று தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று அவர் வாக்கு சேகரித்த போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக வந்து அவரை வரவேற்றனர். பின்னர் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அவரிடம் மனுவாக எழுதிக் கொடுத்தனர்.
அந்த மனுவை கருணையுடன் பரிசீலனை செய்து அடிப்படைத் தேவைகளை செய்து தருவதாக வேட்பாளர் செந்தில்நாதன் உறுதி அளித்தார். அதோடு அங்கு வந்திருந்த கிராம மக்களிடம் நலமும் விசாரித்தார்.
அதனால் மகிழ்ச்சியடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வேட்பாளர் செந்தில் நாதனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பதாக உறுதி அளித்தனர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.