June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறை அருகே ம.ம.க. வேட்பாளர்பிரச்சாரம் செய்ய இளைஞர்கள் எதிர்ப்பு – ஊர் மக்கள் வேட்பாளாரை தோளில் சுமந்து சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

திருச்சி மாவட்டம். மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி கட்சி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ப அப்துல் சமது மீண்டும் போட்டியிடுகிறார். கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து வந்த அப்துல் சமது புத்தாநத்தம் அடுத்த வெள்ளைய கவுண்டம்பட்டிக்கு பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் சில இளைஞர்கள், ஊருக்குள் செல்ல விட மாட்டோம் என்று கூறினர் பின்னர் இது பற்றி தகவல் அறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் உடனடியாக வெள்ளைய கவுண்டம்பட்டி ஊர் எல்லைக்கு வந்து இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் காரில் ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

காரில் வெள்ளைய கவுண்டம்பட்டிக்கு வாக்கு சேகரிக்க வந்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமதை கிராமத்தினர் காரில் இருந்து அவர்களது தோளில் சுமந்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிச் சென்றனர் இதை சற்றும் எதிர்பாராத வேட்பாளர் அப்துல் சமத் ஆனந்தக் கண்ணீரில் ஊர் மக்களுக்கு நன்றியை தெரிவித்தார்

பின்னர் வாக்காளர்கள் மத்தியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தாம் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் வெள்ளைய கவுண்டம்பட்டி பகுதியில் செய்த பணிகள் குறித்து விளக்கி பேசினார்

மீண்டும் திராவிட மாடல்கள் ஆட்சி அமைய எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தாரும்படியும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்