April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி ரயிலில் போதை பொருள் மீட்பு :

திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி , மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு குற்றத் தடுப்பு சம்பந்தமாக திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுகுமாரன் , தலைமை காவலர் ஆனந்த் காவலர்கள் கண்ணதாசன், ராஜ்குமார் மற்றும் திருச்சி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் ஆகியோர் , திருச்சி ரயில் நிலைய நடைமேடை எண் 5 ல் வண்டி எண். 20849 புவனேஸ்வர் to ராமேஸ்வரம் செல்லும் விரைவு வண்டியில் பின்னால் உள்ள பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த (ட்ராலி )சூட்கேசில் சோதனை செய்த போது தலா 2 கிலோ கொண்ட 5 பாக்கெட்டுகள் மொத்தம் 10 கிலோ, (மதிப்பு சுமார் 5 லட்சம்) அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டு அது முறையாக மீட்கப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு திருச்சி , திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

Facebook
YouTube
Instagram
WhatsApp