மணப்பாறை மார்ச் 20:



திருச்சி மாவட்டம் மணப்பாறையில், நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைமுறையில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை மணப்பாறை அருகே உள்ள கோவில்பட்டி சாலையில் புதுகாலனி என்ற பகுதியில் பறக்கும் படை அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர் சோதனையின் போது, ரைஸ் மில் உரிமையாளரான மாரி என்பவரிடமிருந்து ரூ.55,700 -யை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மணப்பாறை தாலுக்கா அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election