February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் பள்ளிக்குளம், சொரத்தூர், பெரும்புகை, ஆனத்தூர்ஆகிய கிராமங்களுக்கு பேருந்து சேவையை இயக்க வேண்டுமென அரசுக்கு அக்கிராம பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செஞ்சிஅன்னை அஞ்சுகம் அம்மாள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளிகுளம், சொரத்தூர், பெரும்புகை, ஆனத்தூர்கிராமத்திற்கு புதிய பேருந்து சேவைதொடக்க விழா நிகழ்ச்சி செஞ்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம்கோட்டத்தின் உதவி மேலாளர் வணிகம் சிவராமன் தலைமை தாங்கினார் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் செஞ்சி பணிமனை மேலாளர் தன்சிங் அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய வழித்தடத்தில் மூன்று பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,ஒன்றிய செயலாளர் வல்லம் தெற்கு மொடையூர் துரை,மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரசன்னா, மகளிர் அணி அமைப்பாளர் திலகவதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பள்ளிக்குளம் சுகுணா வேலாயுதம்,ஆனத்தூர் பழனி, சொரத்தூர் தரணி அசோக்,தொமுச நிர்வாகிகள் லூர்து இமானுவேலு, அரிகிருஷ்ணன்,தியாகராஜன், காதர் நவாஸ், தமிழ்மணி, ராஜேந்திரன், நிர்வாகிகள் செல்வமணி, அரசிரமேஷ்,தொண்டரணி பாஷா,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp