ஈரோடு கிழக்கு மேற்கு தொகுதிகளை பாஜகவுக்கு கொடுத்தால் தோல்வி நிச்சயம்…
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு பேச்சால் பரபரப்பு…


ஈரோடு. பிப் 05
ஈரோட்டில் உள்ள தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கினால் தோல்வி நிச்சயம் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு பேசியதால் ஈரோடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது,. மேலும் டாக்டர் அன்புமணி தரப்பு பாமகவும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் கூட்டணியில் இணைந்துள்ளது.
நடைபெற உள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் நான்கு மணி போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசியல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு, ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் அதிமுக பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது என்ற கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போதே அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு தெரிவித்ததாவது.. ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளைப் பொறுத்தவரை அதிமுக பலமாக உள்ளது. இங்கு அதிமுக மற்றும் திமுகவுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் இந்தத் தொகுதிகளில் ஒன்றை பாரதிய ஜனதா கட்சிக்கு தொகுதி உடன்பாட்டில் போதிக்கினால் நிச்சயமாக பாஜக தோல்வி அடையும் என முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே எஸ் தென்னரசு தெரிவித்தார்.
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் களம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மெல்ல மெல்ல சோதி பிடித்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசுவின் கருத்து அதிமுக பாஜகவுக்கு இடையே தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!