February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மத்திய பட்ஜெட் குறித்து ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் கருத்து.!!!.

ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்கு எந்த அறிவிப்பும் இல்லை
மத்திய பட்ஜெட் குறித்து ஆர் எல் வெங்கட்ராமன் கருத்து.!!!.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு எந்த அறிவிப்பும் இல்லை. கார்ப்பரேட்டுகள் மேலும் வளர உருவாக்கப்பட்ட பட்ஜெட்டாகவே இருக்கிறது. இரட்டை என்ஜின் ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு எந்த திட்டமும் , வேலை வாய்ப்பை உருவாக்க , எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. குறிப்பாக புதுச்சேரி மாநிலம் முற்றிலுமாக மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
ஒரு நாட்டில் சிறிய தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைந்தால் தான் அது நாட்டின் வளர்ச்சியாக கருதப்படும். ஆனால் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு மிக குறைவாகவே இருக்கிறது. இது ஏற்புடையது அல்ல. அதேபோல் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. புதிய வேலை வாய்ப்பை உருவாக்க எந்த அறிவிப்பும் இல்லை.
நமது இந்திய நாடு 75 சதவீதம் விவசாயத்தை சார்ந்த நாடு ஆனால் விவாசாயிகளின் வளர்ச்சிக்காக எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. விவசாய பொருட்களின் விலை தாறு மாறாக உள்ளது. விவசாய இயந்திரங்களின் விலையை கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் இல்லை. தனி நபர் வருமானத்தை பெருக்க எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாதது வேதனை அளிக்கிறது. மாறாக இந்தியா கடன் பெற உரிமை கோரியிருப்பது மக்கள் தலையில் கடன் சுமை மேலும் ஏற்றுவது வளர்ச்சிக்கான அறிகுறி இல்லை என்பதை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை. .
அமெரிக்காவின் வரிவிதிப்பை தடுப்பதற்கான வழிகள் எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை.

ஒட்டு மொத்தமாக மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் , ஏழை எளிய நடுத்தர மக்களை மேலும் வஞ்சித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் அதிகரித்து இந்திய பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைவு ஏற்பட்டு இந்தியாவில் உள்ள 80 சதவீத ஏழை மக்கள் கையேந்தும் நிலை உருவாகியுள்ளது.

இந்த மத்திய பட்ஜெட் விஞ்ஞான ரீதியாக பாமர மற்றும் நடுத்தர மக்களை ஏமாற்றும் மாயாஜால பட்ஜெட் ஆகும் என்று ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் ஆர் எல் வெங்கட்ராமன் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார்.

அன்புடன்

ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்
புதுச்சேரி.

Facebook
YouTube
Instagram
WhatsApp