June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மணப்பாறையில்கோலாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்ற திருவள்ளுவர் திருவிழாமுச்சந்தியில் முப்பால் விளக்கம் அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திருக்குறள் பயிற்றகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருக்குறள் முற்றோதுதல், கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிடவைகளை தொடர்ந்து திருவள்ளுவர் பட வீதி உலா நடைபெற்றது. பெரியார் சிலையில் இருந்து பெண்களின் கோலாகல கோலாட்டத்துடன் நகரின் முக்கிய சாலைகளின் வழியாக சென்று விழா நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தை அடைந்தது. இந்த ஊர்வலகத்தின் போது முச்சந்திகளில் திருக்குறளின் முப்பால் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதே போல் சாலையில் செல்வோரை அழைத்து ஒரு திருக்குறளாவது சொல்ல அறிவுறுத்தப்பட்டது. தாரை தப்பட்டை முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்ற இந்த திருவள்ளுவர் திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.