June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் பேரூரில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா, மஞ்சள், கரும்பு வைத்து, புதுப்பானையில் பொங்கலிட்டு அதி விமர்சையாக இனிப்புகளை வழங்கி கொண்டாடப்பட்டது.

மேலும் பர்கூர் பேரூராட்சியில் உள்ள 100-க்கும் மேற்ப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, புடவைகளை வழங்கப்பட்டது

இவ்விழாவில் கழக மூத்த முன்னோடிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பாகமுகவர்கள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவில் இனிப்புகளை உண்டு மகிழ்ந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் கவியரசு