June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரியலூர் – பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ3000 வழங்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளுக்கு பயிர் கடன் நகைக்கடன் வழங்குவதில்லை என குற்றம் சாட்டி விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கீழப்பழுவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் உரக்கடன் உள்ளிட்ட விவசாய தேவைகளுக்கான கடன்களை பெற்று வருகின்றனர் இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் விவசாயிகள் தங்கள் பெயரில் உள்ள கடன்களை அடைத்து புதியதாக விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்திருந்த விவசாயிகளுக்கு இதுவரை கடன் வழங்கவில்லை என கூறப்படுகிறது இது குறித்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கீழப்பழுவூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அப்போது புதிய கடன் கேட்டு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை கடன் வழங்க வில்லை இதனால் தனியாரிடம் கடன் வாங்கி விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம் அவர்களுக்கும் வாங்கிய கடனை அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கேட்டால் வழங்க மறுக்கிறார்கள். பொங்கல் பரிசு தொகுப்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் வழங்க வேண்டிய இருப்பதால் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டினர் எனவே விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு தேவையான கடன்களை வழங்க கூட்டுறவுத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்