February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில்

பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சென்னை தலையகத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சி மாநிலப் பொதுச் செயலர் திரு.கே. வேதவியாஸ் தலைமையில் 11.11.2025 மற்றும் 12 .11.2025 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலுதவிப் பயிற்சி, பேரிடர் கால தற்காப்பு மற்றும் மீட்பு . பணிகள் போன்ற தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் ,விழுப்புரம் மாவட்டக் கன்வீனர் முனைவர். ம. பாபு செலவதுரை அவர்கள் பேரிடர் மீட்பு பணிகள் சார்ந்த செயல் அறிக்கை தயாரிக்கும் வழிமுறைகள் விளக்கினார். அப்போது
2004 – 2005- யில் சுனாமி பாதிப்பின் போது கல்வித்துறைக்கு தான் சமர்ப்பித்த செயல் ஆய்வு அறிக்கை(Action Research Report) தலைப்புகளாக

  • பிரச்சனையை அடையாளம் காணல்
  • பிரச்சனையை வரையறுத்தல்
  • பொருளாதாரப் பிரச்சனைகள்
  • கல்வி பெருவதில் பிரச்சனைகள்
  • பிரச்சனைக்கான உத்தேசக்காரணங்கள் .
  • உத்தேசத் தீரவுகளை ஆய்ந்தறிதல் .
  • நடைமுறைக்கு
    சாத்தியமான தீர்வுகளைத் தேர்ந்தெடுத்தல்
  • தேர்ந்தெடுத்த தீர்வினை நடைமுறைப்படுத்துதல் .
  • முடிவுகளைப் பகுப்பாய்தல்
  • நடைமுறைபடுத்தியவை – நெடுநேரக்கு பார்வை .
  • சான்றுகள்
  • அறிக்கை அளித்தல் . ஆகிய தலைப்புகளை
    விளக்கி பயிற்சியாளர்களுக்கு வழங்கி விளக்கினார் .
    இதில் மாநில பேரிடர் பயிற்சியாளர்கள் திரு. பெஞ்சமின், பெலிட் சுதர். சாந்தகுமார் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
    இந்த மாநில அளவிலான பயிற்சியில் தமிழ்நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாவட்ட ரெட் கிராஸ் கிளை நிர்வாகிகள் ஜே.ஆர்.சி. கன்வீனர்கள் பயிற்சி பெற்றனர். பங்கேற்றவர்களுக்கு சான்றினை மாநிலப் பொதுச்செயலர் திரு. கே. வேதவியாஸ் அவர்கள் வழங்கி வாழ்தினார்.
Facebook
YouTube
Instagram
WhatsApp