August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…

பெருந்துறை கொங்கு கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்…

ஈரோடு. ஆகஸ்ட். 26

துணை குடியரசுத் தலைவர் சி பி ராதா கிருஷ்ணன் அவர்கள் 29ஆம் தேதி பெருந்துறை கொங்கு கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொங்கு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் வருகின்ற 29ஆம் தேதி கல்லூரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

டெல்லியில் இருந்து தனி விமான மூலம் வரும் இவர்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்து, அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் கல்லூரி வளாகத்திற்கு வருகின்றனர். அதன் பிறகு அங்கு நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் கொங்கு கல்லூரியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை முன்னிட்டு அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மண்டல ஐஜி ரம்யபாரதி, ஈரோடு மாவட்ட எஸ்பி கிரண் சுருதி ஆகியோர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் கல்லூரி அமைந்துள்ள வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.