August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பஞ்சாயத்து செய்வதாக கூறி பணம் நிலம் ஆகியவற்றை மோசடியான முறையில் அபகரித்துக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..

ஈரோடு பெருந்துறை கங்கை கல்வி நல அறக்கட்டளையினர் எஸ் பி அலுவலகத்தில் புகார்
.

ஈரோடு. ஆகஸ்ட். 26

பஞ்சாயத்து பேசி தனது சொத்துக்களை மீட்டுத் தருவதாக கூறி பஞ்சாயத்து பேச வந்தவர்களே பணம் மற்றும் சொத்துக்களை அபகரித்துக் கொண்டதாக ஈரோடு எஸ் பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று புகார் மனு கொடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஈங்கூர் பகுதி சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் ஈங்கூர் பகுதியில் கங்கை கல்வி நல அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளை ஆகியவற்றை நிறுவி செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இவர் மட்டும் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் நேற்று மதியம் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்..

அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது…

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் ஈங்கூர் கிராமத்தில் ஸ்ரீ மகா கல்வி அறக்கட்டளை பதிவு எண்.(459/2004) பெருந்துறை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து மேற்படி அறக்கட்டளை கீழ் இயங்கோர் கிராமத்தில் சர்வே எண்( 828/ சி.1 ல்) மகரிஷி வித்யா மந்திர்( சி பி எஸ் சி ) பள்ளியை 2014 ஆண்டு தொடங்கி கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். மேற்படி அறக்கட்டளை மற்றும் பள்ளியின் நிறுவன தலைவராக ஈஸ்வரமூர்த்தி அறக்கட்டளை மற்றும் பள்ளியின் செயலாளராக கே வி கந்தசாமி, இ வள்ளியம்மாள் மற்றும் பள்ளியின் தாளாளராக பிரவீன் ஆகியோர் இருந்து வந்தனர்.

மேற்படி அறக்கட்டளையின் உறுப்பினர்களாக 17 உறுப்பினர்கள் இருந்து நிர்வாகத்தை நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில் பள்ளியில் தாளாளராக இருந்த பிரவீன் பள்ளி நிர்வாகத்தில் முறைகேடு செய்வதாக பெரிய வரவே அவரை நிர்வாகத்தில் இருந்து நீக்கி விட்டோம்.

அதன் பிறகு அந்த நபர் சென்னிமலை திமுக ஒன்றிய செயலாளர் பிரபு, சென்னிமலை ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் என்ற சுப்பிரமணியன் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு பள்ளியின் பெண் நிர்வாகிகளை தாக்கி மிரட்டி சொத்துக்களை அபகரித்து கொண்டனர்.

அதன் பிறகு நாங்கள் பெருந்துறை சேர்ந்த அரசியல் பிரமுகர் கே கே சி பாலு பிரச்சனையை நாங்கள் முடித்து தருகிறோம் என்று சொல்லி பஞ்சாயத்திற்கு அழைத்தனர்.

இதன் பிறகு பள்ளி நிர்வாகத்தில் பிரச்சனை உருவானது. நிர்வாகத்துக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை பேசி தீர்க்க கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கே கே சி பாலு மற்றும் திங்களூர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக முன்னாள் பெருந்துறை தொகுதி செயலாளர் கந்தசாமி ஈரோடு மாவட்ட கொங்குநாடு மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் சித்தோடு ஈஸ்வரமூர்த்தி, பவானியை சேர்ந்த கொங்கு ராஜா ஆகிய நாள் வரும் பள்ளி பிரச்சனையை நாங்கள் பேசி தீர்த்து தருகிறோம் என்று சொல்லி எங்கள் பெருந்துறை பஸ் நிலையம் அருகில் உள்ள கே கே சி பாலு அலுவலகத்தில், கடந்த{1/9/2025) அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

அங்கு சென்ற எங்களிடம் உங்கள் பிரச்சனைகளை நாங்கள் பேசி தருவதாக இருந்தால் ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் நிலத்தின் பத்திரங்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டனர்.

நாங்களும் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையில் அவர் கேட்ட ஒரு கோடி ரூபாய் மற்றும் பள்ளியின் பத்திரங்களை ஒப்படைத்தோம்.

ஆனால் எங்களது பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வும் காண அவர்கள் முன் வரவில்லை. இதனைத் தொடர்ந்து பலமுறை அவரின் அலுவலகத்திற்கு நாங்கள் சென்று கேட்ட பொழுது, ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த கேகேசி பாலு மற்றும் அவர் உடன் இருந்தவர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்கினர்.

இந்த சம்பவத்தால் பயந்து போன நாங்கள் அங்கிருந்து தப்பித்தால் போதும் என உயிர் பயத்தில் ஓடி வந்து விட்டோம்.

ஏற்கனவே ஒரு நபர் எங்களை ஏமாற்றி விட்டார் என்ற அடிப்படையில், பெருந்துறை கே கே சி பாலு அவர்களிடம் சென்று அவர் கேட்ட ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் நிலத்தின் பத்திரங்களையும் ஒப்படைத்து நம்பிக்கையோடு காத்திருந்த நிலையில், பெருந்தை கே கே சி பாலுவும் எங்கள் முதுகில் குத்தி எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்.

அது மட்டுமல்லாமல் எங்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மட்டும் நிலத்தின் ஆவணங்களையும் ஏமாற்றி வாங்கிக் கொண்டார்.

எனவே ஈரோடு மாவட்ட காவல் நிர்வாகம் எங்களுக்கு இரண்டு தரப்பினரிடம் இருந்து எங்களது பணம் மற்றும் சொத்துக்களை மீட்டுக் கொடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெருந்துறை ஈங்கூர் கங்கை கல்வி நல அறக்கட்டளையின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.