வந்தவாசி, ஆக 25:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அத்திப்பாக்கம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பி.சரவணன் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர் தே.ரங்கநாதன், வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க செயலாளர் பா. சீனிவாசன், பிடிஏ தலைவர் டி.பஞ்சாட்சரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியை ரஹமத் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப.குப்பன் பங்கேற்று, தமிழ் இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் தமிழே நம் உயிர் மூச்சாக இருக்க வேண்டும் என்றும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். மேலும் இந்த நிகழ்வில் கவிஞர் தமிழ்ராசா கவிநயத்துடன் தமிழ் சார்ந்த நிலைகளை வாழ்த்துரையாகவழங்கினார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்.தண்டபாணி, ஆ.திருவேங்கடம், ம.வித்யா, கணினி ஆசிரியர் பாக்ய லட்சுமி, எழுத்தர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில் பட்டதாரி ஆசிரியர் சி.ரமேஷ் நன்றி கூறினார்.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…