August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு கபாலீஸ்வரர் கோவிலுக்குள் புகுந்த பாம்பு: ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு

ஈரோடு ஆகஸ்ட் – 25

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோட்டை பகுதியில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில் பாம்பு புகுந்ததால் பக்தர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவிலில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் பாம்பு ஒன்று நடமாடுவதை பூசாரி ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து வந்த யுவராஜ், மாட்டுத் தொழுவத்திற்குள் பதுங்கியிருந்த பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றார். பாம்பு பிடிபடாமல் நீண்ட நேரம் போக்கு காட்டிய நிலையில், ஒரு மணி நேரத்துக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு பாம்பை பத்திரமாக மீட்டார்.

பின்னர் மீட்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற கபாலீஸ்வரர் கோவிலுக்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.