குடியிருப்பு பாளையம் கிராம பொதுமக்கள் சார்பில் தோழர் அ. பெருமாள் விடுக்கும் பத்திரிக்கை செய்தி புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி குடியிருப்பு பாளையம் கிராமத்தில் சுப்பையா நகர் சந்திப்பில் கிராம பொதுமக்கள் சார்பில் 22 8 2026 இன்று காலை 10 மணி அளவில் கிராம பொதுமக்கள் நலன் கருதி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக செல்கின்ற உயர் மின் அழுத்தம் HTலைனை கிராமத்தின் பிரதான சாலையில் உயர் மின்னழுத்த HTகொண்டு வருவதை கண்டித்து தோழர் பெருமாள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்தின் முன்னதாக நேற்று 21 8 2026 குடியிருப்பு பாளையம் சமுதாயம் நலக்கூடத்தின் எதிரில் மின்சார துறையை சேர்ந்த செயற்பொறியாளர் திரு சி உமேஷ் சந்திரா அவர்களும் காட்டுக்குப்பம் AE அன்பழகன் அவர்களும் பாகூர் ராம்குமார்JE அவர்களும் ஏம்பலம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு E.மோகன் தாஸ் MLA அவர்களும் பொதுமக்கள் மத்தியில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தையில் செயற்பொறியாளர் திரு. உமேஷ் சந்திரா அவர்கள் அவர்கள் பழைய படியாக சென்ற பாதையிலேயே செய்து தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் அந்த வாக்குறுதியை ஏம்பலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு மோகன் தாஸ் MLA அவர்கள் நிராகரித்து ஊருக்கு உட்பகுதியில் தான் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் அதனை கண்டித்து இன்று 22 8 20 26 காலை 10 மணி அளவில் மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்தில் கிராமத்தின் மூத்த தோழர் திரு மாசிலாமணி அவர்கள் கலந்து கொண்டு HT லைனை பற்றி விரிவாக பேசினார்கள் இந்த மறியல் போராட்டத்தில் கிராமத்தின் முன்னணி தோழர்கள் ஜே வீரபாலன் எஸ் காசிநாதன் ஐய்யப்பன் தோழியர் ஆனந்தவல்லி சாந்தி உத்திராபதி மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டார்கள் மறியல் செய்து கொண்டிருக்கும் பொழுதே பாகூர் காவல்துறை அதிகாரி சிவகுமார் எங்களை கைது செய்து வேனில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர் இந்த மறியல் போராட்டத்தில் அடுத்த கட்ட போராட்டமாக கிராமத்தின் நலன் கருதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்று அழைப்புகள் விட்டிருக்கின்றோம் இச்செய்தியினை தங்கள் டிவிகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியிடுமாறு உங்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு அ. பெருமாள் 944 30 78 917
More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…