August 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே திமுகவை சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்புசெய்துள்ளஓடை புறம்போக்கு நிலத்தையும் மீட்டு பொது வழிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.…………………………கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளஓடையாண்டஹள்ளி தரப்பு எச்சம்பட்டி கிராமத்தில் ஊர்மக்க பயன்பெறும் வகையில் பொது வழிப்பாதை கேட்டு எச்சம்பட்டி,எத்தனஅள்ளி ஆகிய கிராம மக்கள்சிங்கேரியம்மா கிணறுபள்ளத்தில் இருந்து போடம்பட்டி ரோடு இணைப்பு வரை அரசு ஓடை புறம்போக்கில் பொதுவழி அமைக்க வேண்டும் என்று எச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை மனுவினை கொடுத்து வந்தனர்.இதன் அடிப்படையில் இன்று போலீசார் பாதுகாப்புகளுடன் வருவாய் துறையினர் ஓடைப்புறம்போக்கு நிலத்தினை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினைமேற்கொண்டனர்அப்போது ஓடை புறம்போக்கு நிலத்தை அளவிடாமல் விவசாயி முனுசாமி என்பவரது பட்டா நிலத்தை மட்டும் வருவாய் துறையினர் அளவீடு செய்ததால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் முறைப்படி சிங்கேரியம்மா கோவில் பள்ளத்தில் இருந்துஓடை புறம்போக்கில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது மக்களுக்கு பொது வழி ஏற்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வழியுறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது,

பின்னர் இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் சீங்கேரியம்மா கிணறு பள்ளத்தில் இருந்து போடம்பட்டி ரோடு வரை ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது இந்த ஓடை புறப்போக்கு நிலத்தின் தனி நபர் ஆக்கிரமிப்பை அகற்றி பொது வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு கொடுத்தை அடுத்து வருவாய் துறையினர் ஓடை புறம் போக்கு ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
ஆனால் வருவாய்துறையினர் திமுகவை சேர்ந்த
சரவணன் சிவசங்கரன், முருகேசன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்துள்ள
அரசு புறம்போக்கு மீட்காமல் தன்னுடைய பட்டா நிலத்தை அழவீடு செய்து கல் நட்டு உள்ளதோடு கோழிப்பண்ணைக்கு வரும் மின்சாரத்தையும் துண்டித்து விடுவதாக மின்வாரிய அலுவலர்கள் மிரட்டி வருவதாகவும்
அகையால் வருவாய் துறைமுறைப்படி ஓடை அரசுப் புறம்போக்கு நிலத்தை முறையாக அளவிடும் பணியினை செய்து பொது வழிப்பாதை அமைக்க தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என்று வேதனையுடன் குறிப்பிட்டனர்.
பேட்டி.. விவசாயி முனுசாமி