August 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தை புகைப்படக் கலைஞர்கள் நலச்சங்கம் துவக்க விழா & விருது வழங்கும் விழா

வந்தவாசி, ஆக 22:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில்
வந்தை புகைப்படக் கலைஞர்கள் நலசங்கம் துவக்க விழா, மற்றும் விருது வழங்கு விழா வந்தை பிரேம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசியின் மூத்த புகைப்பட கலைஞர் கேப்டன் மு.பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தியாகராசன், முரளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியினை ஹரிசங்கர் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.