தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழக தீயணைப்பு வீரர்கள், ரெயில்வே அதிகாரிகள் இணைந்து
திருச்சி குட்ஷெட்
யார்டு பகுதியில்
ரெயில் விபத்து ஒத்திகை நிகழ்ச்சி
3 மணி நேரம் நடந்தது :
திருச்சி ஆக 21-

திருச்சியில் ரெயில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை காப்பாற்றுவது ரெயில் பெட்டிகளை சரி செய்து மீண்டும் ரெயிலை எப்படி இயக்குவது என்பது குறித்த ஒத்திகை திருச்சி குட்ஷெட் யார்டு பகுதியில் நடத்தப்பட்டது.
ரெயில் விபத்து ஏற்படும்போது அவற்றின் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்த கூட்டுப் பயிற்சி, தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழக தீயணைப்பு வீரர்கள், மருத்துவ குழுவினர் இணைந்து ரெயில்வே அதிகாரிகளால் இன்று காலை திருச்சி குட்ஷெட் யார்டில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அங்கு ரெயில் விபத்து ஏற்பட்டது போல செயற்கையாக வடிவமைக்கப்பட்டு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. அப்பொழுது ரெயில் விபத்துகளின் போது மீட்பு நடவடிக்கை குறித்த பாதுகாப்பு குழுவினர் செயல் விளக்கம் நடத்தி காட்டினர். இதற்காக 2 பொது பெட்டிகள் ஒரு ஏசி பெட்டி கவிழ்க்கப்பட்டு ஒரு பெட்டியின் மீது மற்றொரு ரெயில் பெட்டி ஏற்றப்பட்டது. இதை விபத்தாக கருதி திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்த அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. உடனே தளவாட பொருட்கள் அவசர சிகிச்சைக்கான மருத்துவ பொருட்கள் கிரேன் உள்ளிட்டவை யார்டுக்கு கொண்டுவரப்பட்டது. திருச்சி ரெயில்வே கோட்ட முதல் நிலை பாதுகாப்பு பிரிவு அதிகாரி தலைமையில் ரெயில்வே துறையினர், ரெயில்வே பாதுகாப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர், மருத்துவத்துறையினர், தொழில்நுட்பத் துறையினர், காவல் துறையினர் என 250க்கும் மேற்பட்டோர் இந்த ஒத்திகையில் கலந்து கொண்டனர். விபத்தில் சிக்கிய நபர்களை மீட்பது உடனடியாக அவர்களுக்கு முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்றவற்றை தத்ரூபமாக செய்து காட்டினார். ரெயில் விபத்து நடைபெறும் இடத்தைப் போலவே அனைத்து ஏற்படும் செய்யப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி கோட்டத்தில் விபத்து நடந்தால் உடனடியாக செய்ய வேண்டிய மீட்பு பணிகளுக்கான பயிற்சியாகவும், ஒத்திகையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…