August 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து

திருச்சி தெற்கு மாவட்ட திமுகவினர் மறியல் போராட்டம்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கைது :

திருச்சி ஆக. 4-

தி.மு.க இளைஞரணி செயலாளரும்,தமிழக எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தி மறியலில் ஈடுபட்டனர்.மாநகர திமுக செயலாளர்,மண்டல குழு தலைவர் மதிவாணன் முன்னில வகித்தார்இந்தப் போராட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்

இந்த நிகழ்வில் மாநகர செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள் மோகன், ராஜ் முகமது, நீலமேகம், மணிவேல், பாபு,தர்மராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் லீலா வேலு, செங்குட்டுவன், மாநகர துணை செயலாளர்கள் நூர்கான், பொன் செல்லையா, துணை மேயர் திவ்யா தனக்கோடி, பொது குழு உறுப்பினர் மணிமேகலை, ராஜேஸ்வரன்,வட்டச் செயலாளர் முருகானந்தம்,கவுன்சிலர் சீதாலட்சுமி முருகானந்தம் மற்றும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக இந்த கண்டன போராட்டத்தில் கலந்து கொண்டனர் .பின்னர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் கோஷங்களை எழுப்பியவாறு மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து போலீசார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை கைது செய்தனர்.