மணப்பாறை ஆக 01
மணப்பாறை பேருந்து நிலையம் முன்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இவ் ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் வையம்பட்டி ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரேமாவதி நகர துணை செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஏஐடியூசி சங்க மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரமாவதி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் பெருமாள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சௌகத் அலி மணி முருகேசன் பிச்சை கண்ணு சின்ன கண்ணு தங்கவேல் செல்வராஜ் கண்ணன் உட்பட வடக்கு தெற்கு வையம்பட்டி மணப்பாறை நகரம் இடை குழுக்களின் நிர்வாகிகள் பங்கேற்று மேகதாதில் அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது என்று முழக்கமிட்டனர் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு உறுப்பினர் அருள் ஆரோக்கியம் நன்றி கூறினார்

More Stories
செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
விழுப்புரத்தில் அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
பள்ளிபாளையம் பகுதிகளில் தொடரும் சாயப்பட்டறைகளின் அத்து மீறல்கள்..