புதுச்சேரி, ஜூலை 27:
புதுச்சேரியில் அனைத்து உலக முதலியார் பிள்ளைமார் சங்கமும், லைன்ஸ் கிளப் ஆஃப் காஸ்மோபாலிடன் சங்கமும் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் நேற்று (26.07.2026) வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த முகாமுக்கு சங்கங்களின் தலைவர்கள் ஸ்ரீதர் பிள்ளை, மதிவாணன், கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார் மற்றும் சித்ரா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஜி.ஆர். மருத்துவமனையின் சேர்மன் வித்யா மற்றும் வாசன் ஐ கேர் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஸ்டீபன், கார்த்திக் ஆகியோர் சிறப்பு மருத்துவர்களாகக் கலந்துகொண்டு பொதுமக்களுக்குச் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் சிவக்கொழுந்து, ஈரம் ராஜேந்திரன், மதிவாணன் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் எம்.ஜி.ஆர். மருத்துவமனை தாஸ் அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
இப்பகுதி மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்முகாமில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனைகள் செய்து பயனடைந்தனர்.
மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளைச் சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!