July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

குற்றாலம் நோக்கிப் புறப்பட்டது புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு: 85 பேருடன் 3 நாள் சுற்றுலா பயணம்!

புதுச்சேரி:

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பாக, ஆண்டுதோறும் நடத்தப்படும் பெருமைமிக்க சுற்றுலாப் பயணம் இந்த ஆண்டும் உற்சாகமாகத் தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாஹே, ஏனம் பகுதிகளை உள்ளடக்கிய யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 104 வணிகர் சங்கங்கள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இந்த ஆண்டுக்கான மூன்று நாள் சுற்றுலாவை முன்னிட்டு, புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கர், தலைவர் S. பாபு, முதன்மை துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் பொதுச் செயலாளர் முருக பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்து, சுற்றுலாப் பயணிகளை அன்போடு வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

இந்தச் சுற்றுலாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்து வழிநடத்தும் டூர் சேர்மனாக அருள் வைத்தியநாதன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். புதுச்சேரியில் இருந்து ஒரு பேருந்து மற்றும் நான்கு கார்களில் புறப்பட்டுள்ள இந்தச் சுற்றுலாவில், கூட்டமைப்பைச் சேர்ந்த மொத்தம் 85 நபர்கள் ஆர்வம்டன் பயணிக்கின்றனர்.

இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலத்தை நோக்கிச் செல்லும் இந்தக் குழுவினர், அங்கு சென்றடைந்ததும் கூட்டமைப்பின் சார்பில் முக்கிய வணிகர் சந்திப்புக் கூட்டம் (Meeting) ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.