அறந்தாங்கி ஜூலை 20
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள செட்டிக்காடு கிராமத்தில் WADO INTERNATIONAL KARATE FEDERATION TAMILNADU சார்பில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தகுதிப்பட்டை (Belt Grading) வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கராத்தே மாணவர்களுக்கு தகுதிப்பட்டைகளை வழங்கி பாராட்டினார்.
மேலும், மாணவர்கள் தற்காப்புக் கலையான கராத்தே மூலம் உடல் ஆரோக்கியம், ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி வடக்கு ஒன்றிய செயலாளர் அயூப்கான், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆண்ட்ரூஸ் பாண்டியன், நகரச் செயலாளர் முகமது ராவுத்தர், VGS செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கராத்தே பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
செய்தியாளர் பழனிவேல்

More Stories
கோவையில் 4,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றகோவை மாரத்தான்.
புதுச்சேரியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி – 1,500 மாணவர்கள் பங்கேற்பு
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்