September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுவை முதலமைச்சருக்கு அன்பான வேண்டுகோள் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் முடியும் நிலையில் உள்ளது அப்படி இருக்கும் வேலையில் மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்குவது தயங்குவது ஏன் ?மக்கள் உங்கள் பக்கம் தான் இரு்கிறார்கள் ஆகையால் மந்திரிகளுக்கு விரைவில் துறைகள் ஒதுக்க வேண்டும் புதுச்சேரி மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வீணாக்க வேண்டாம் யார் யார் எப்படி என்று புதுச்சேரி மக்களுக்கு தெரியும்தேர்தல் நேரத்தில் பிரதமர் வந்தார்கள் உள்துறை மாதிரி வந்தார்கள் அண்ணாமலை அவர்கள் வந்தார்கள் சுரானா இங்கே குடி கொண்டிருக்கிறார்கள் அதே போல் எதிரணியில் பல தலைவர்கள் வந்தார்கள் நடிகர்களும் வந்தார்கள் இதையெல்லாம் தவிர்த்து புதுச்சேரி மக்கள் மத்தியிலே பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஓரளவு நல்லது செய்வார்கள் என்று நம்பி வாக்களித்து உள்ளார்கள் மற்றும் பெருவாரியான மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து உள்ளார்கள் எனவே நீங்கள் தயங்க வேண்டாம் யாருக்கு வேண்டுமானாலும் எந்த பதவியாக இருந்தாலும் கொடுக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் ஒன்பது முறை அரசு பதவி அமருவதற்கான வாய்ப்பு உள்ளது இதில் ஏழு முறை அமர்ந்து உள்ளீர்கள் மீதி உள்ளது இரண்டு முறை ஆகவே நீங்கள் தயங்க வேண்டாம் நீங்கள் வைத்த பதவியை யாராலும் தொடவும் முடியாது இதுவரையும் தொட்டதும் கிடையாது இனி ஒரு காலங்களிலும் அப்படி யாரும் வரவும் முடியாது எனவே மிக விரைவில் அனைத்து மந்திரிமார்களுக்கும் துறையை ஒதுக்க வேண்டும் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவதற்கான வாய்ப்பு இருக்குதா இல்லையா என்று தெரியவில்லை 15,000 கோடி கடனில் உள்ளது இதை தள்ளுபடி செய்வார்களா என்றும் தெரியவில்லை எனவே மத்திய அரசு உடன் இணக்கமாக இருக்க வேண்டும் புதுச்சேரி மக்களுக்கு சில திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் குறிப்பாக புதுவையிலே இப்பொழுது குடி தண்ணீர் பிரச்சனை மாநிலம் முழுவதும் தலை தூக்கி உள்ளது போக்குவரத்து நெரிசல் அதிகமாக தலை தூக்கி உள்ளது மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி புதுச்சேரி மாநிலத்திலே ஐ டி கம்பெனிகள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் போன்ற நல்ல திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு உடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்று மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்குK.லிங்கசாமி,தலைவர்,வன்னிய முன்னேற்ற இயக்கம்,புதுவை.