April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு தொடக்கப் பள்ளி சேதராப்பட்டில் அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் விழா மற்றும் கற்றல் கற்பித்தல் பொருட்களின் கண்காட்சி மற்றும் முன்மழலையர் தினவிழா நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை ஹேமமாலினி வரவேற்புரை மற்றும் நோக்கவுரையை வழங்கினார். மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா, சமக்ரா சிக்ஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

பள்ளி
துணை முதல்வர் உமா வாழ்த்துரை வழங்கினார்.
விழாவிற்கு ஐந்தாம் வட்ட பள்ளித்துணை ஆய்வாளர் புவியரசன் முன்னிலை வகித்தார். மாநில திட்ட இயக்குநர் எழில் கல்பனா விழாவினை துவக்கி வைத்தார்.

மாணவர்களின் வாசித்தல் மற்றும் எண்ணறிவு செயல் பாடுகளையும், கற்றல் கற்பித்தல் கண்காட்சியையும், முன்மழலையர்களின் கற்றல் பொருட்களின் கண்காட்சியையும் பார்வையிட்டார். சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு புத்தகங்களையும் கேடயங்களையும் வழங்கினர். மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி மேன்மேலும் வளரத் தங்களின் வாழ்த்துகளைக் கூறினர்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். ஆசிரியை கௌசல்யா விழாவை தொகுத்து வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் ஊழியர்களும் செய்திருந்தனர். இறுதியாக ஆசிரியை சரிதா நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

Facebook
YouTube
Instagram
WhatsApp