February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

Press Note
புதுச்சேரி மாவட்டத்தில் இண்டாஸ் அறக்கட்டளை சார்பில் இரத்தக் கசிவு நோயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக பேக்டர் 8 மருந்து காரணிகள் மற்றும் பிசியோதெரபி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி 28.02.2026 இன்று நடைபெற்றது, நாடு முழுவதும் 44 திட்ட அலுவலகங்கள் மூலம் 22 மாநிலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெருபவர்களுக்கு இலவசமாக தங்குமிடம்,ஊட்டசத்து நிறைந்த உணவு, மற்றும் ஆற்றுப்படுத்துதல் செய்து வரும் இண்டாஸ் அறக்கட்டளை சார்பில் சேவை செய்து வருகிறது அதன்படி புதுச்சேரி மாவட்டம் hemophilia chapter society, பாண்டிச்சேரி – 605009. இண்டாஸ் அறக்கட்டளை மூலம் இரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக பேக்டர் 8 மருந்து காரணிகள் மற்றும் பிசியோதெரபி உபகரணம் வழங்கும் முகாம் நடைபெற்றது இதில் சுமார் 100 கணக்கான நோயாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். மேலும் நிகழ்ச்சிக்கு பாண்டிச்சேரி hemophilia chepter society தலைவி திருமதி. டாக்டர்.நலினி மற்றும் திருமதி.சசிகலா தலைமை தாங்கினார், இதனை தொடர்ந்து ,இதில் சென்னை இண்டாஸ் அறக்கட்டளையின் திட்ட இணை ஒருங்கிணைப்பாளர் S.பரத், மற்றும் அலுவலக உதவியாளர் Mr.அவினாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp