June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் அரசு கலைக் கல்லூரியில் உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சி..!
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் மற்றும் தென்னாங்கூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து உலக தாய்மொழி தின வில்லிசை நிகழ்ச்சியை கல்லூரி அரங்கில் நடத்தினர். நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சித. ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா, துணைத் தலைவர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஏ.எழில் வசந்தன் வரவேற்றார்.
‘தமிழைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் வில்லிசை நிகழ்ச்சி புலவர் மா.இரகுபதி குழுவினரால் நடைபெற்றது. இசை உதவியாளர் சத்யா, தபேலா கலைஞர் ஆராசூர் கோ.மூர்த்தி, கீபோர்டு ராஜ் குமார் ஆகியோர் உடன் பங்கேற்றனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் நா.மனோகரன், வணிகவியல் துறை தலைவர் ர.மணிமுருகன், ஆங்கிலத் துறை தலைவர் ரா.சுமதி, கணினி துணைக் துறை தலைவர் வ.சந்திரசேகர், விலங்கியல் துறை தலைவர் ப.மோகனவள்ளி, இயற்பியல் துறை தலைவர் இரா.பெரியசாமி, தமிழ்த்துறைத் துறை உதவி பேராசிரியை தா.சுகந்தி, வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க துணைத் தலைவர் வந்தை பிரேம், செயற்குழு உறுப்பினர்கள் ஆ.முரளி, ஸ்ரீமாந்த், எக்ஸ்னோரா கிளை தலைவர் சு. தனசேகரன், இயக்குநர் விஜய் ஆதிநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்வில் அகநானூறு புறநானூறு, சீவக சிந்தாமணி உள்ளிட்ட தமிழ் இலக்கிய பாடல்கள் வில்லிசையாக பாடப்பட்டது. இறுதியில் கோட்டை தமிழ்ச் சங்க பொருளாளர் சீ.கேசவராஜ் நன்றி கூறினார்.