பழங்குடி இருளர் இளையோருக்கான கருத்தரங்கம் மற்றும் கைப்பந்து போட்டி பிப்ரவரி 7 -8, 2026 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று பலவை பழங்குடியினர் அமைப்பு சார்பாக செஞ்சி வட்டம் கவரை பகுதியில் உள்ள பலவை பழங்குடியினர் மையத்தில் பழங்குடி இருளர் இளையோருக்கான மூன்றாம் ஆண்டு கைப்பந்தாட்டப் போட்டியும், ‘நல்லாட்சிக்கான இளையோர் பங்கு’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைபெற்றன. இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்வன் C. பிரகாஷ் அவர்கள் கருத்துரையாற்றி விளையாட்டுப் போட்டியினைத் தொடங்கி வைத்தார் சென்னை அய்கஃப் இயக்குனர் அருட்பணி. பிராங்கிளின் ரெக்ஸ் சே.ச அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நிறைவு விழாவில் பழங்குடி இளையோரின் வளர்ச்சிக்குப் பணியாற்றுபவரை பாராட்டும் நோக்கத்தோடு பலவை அமைப்பு வழங்கும் ‘கொன்சாகா’ விருதானது திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் பாரத் அகாடமி நிறுவனர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திரு. வீ. இராமலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கைப்பந்து போட்டியில் முதல் பரிசினை வென்ற சாத்தம்பாடி குழுவினருக்கு திரு. வீ. இராமலிங்கம் அவர்கள் பரிசினை வழங்கினார். இரண்டாம் இடத்தைப் பிடித்த ரெட்டணை குழுவினருக்கு பலவை அமைப்பின் இயக்குனர் ஆரோக்கியசாமி மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்த சிறு குணம் அணியினருக்கு திட்ட இயக்குனர் ஆனந்த் ஆகியோர் பரிசினை வழங்கினர். ஆட்டநாயகன் விருதினை கீழ்பெண்ணாத்தூர் வட்டம் காட்டுக்குளத்தைச் சார்ந்த தினேஷ் பெற்றார். இதில் திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, கீழ்பெண்ணாத்தூர், வந்தவாசி, மதுராந்தகம் ஆகிய வட்டங்களில் உள்ள 15 கிராமங்களிலிருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் இனத்தைச் சார்ந்த இளையோர் கலந்து கொண்டனர்.
பலவை அமைப்பின் இயக்குனர் அருட்பணி. ஆரோக்கியசாமி, திட்ட இயக்குனர் அருட் பணி. ஆனந்த், துணை திட்ட இயக்குனர் அருட்சகோதரர் யூஜின் மற்றும் பலவை அமைப்பின் பணியாளர்கள் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..