விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட கண்டமங்கலம் கோண்டூர் பகுதிகளில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பது தொடர்பாகவும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் வழியாக உயர் அழுத்த மின்கோரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகளின் விளை நிலங்கள் சேதமடைவதுடன், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 500 எக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மாற்றுப் பாதையில் உயர் அழுத்த மின்கோரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு நில உரிமையாளர்களிடம் எந்தவித முன் ஆலோசனையோ அல்லது அறிவிப்பு எதுவும் இன்றி இந்த உயிர் மின்னழுத்த கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது இந்த உயிர் அழுத்தம் மின் கோபுரத்தை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என
இந்த மனுவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினார் அதோடு
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயற்பொறியாளர் (Executive Engineer), சிறப்பு அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.
மக்களின் கோரிக்கையை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..