February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் ரூ.58 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்க அமைச்சர் ஜான்குமார் பூமி பூஜை.

​புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட விநாயகர் கோயில் தெரு மற்றும் திருவேங்கடம் தெருவில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைப்பதற்காக, அமைச்சர் ஜான்குமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 45 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட இரண்டாவது குறுக்கு தெரு விரிவாக்கத்தில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைப்பதற்காக, அமைச்சர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
​மொத்தம் ரூ.58 லட்சம் மதிப்பிலான இப்பணிகளுக்கான பூமி பூஜையை அமைச்சர் ஜான்குமார் செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், அரசு அதிகாரி டாக்டர் பால்ராஜ், செயற்பொறியாளர் மலை வாசன், உதவி பொறியாளர் சரவணன், இளநிலை பொறியாளர் ஜெய்சங்கர், காமராஜ் நகர் தொகுதி தலைவர் விஜயராஜ், தொகுதி செயலாளர் சரவணன், கட்சி நிர்வாகிகள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
​அதைத் தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில் மக்கள் பணி சிறப்பாக செய்து வரும் அமைச்சர் ஜான்குமாருக்கு, தொகுதி தலைவர் விஜயராஜ் தலைமையில் பொதுமக்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்கள்.

Facebook
YouTube
Instagram
WhatsApp