April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

2050க்குள் புதுமையான புதுச்சேரி — காமராஜ் நகர் தொகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார் ஜோஸ் சார்லஸ் மார்டின்..

2050 ஆம் ஆண்டுக்குள் புதுமையான புதுச்சேரியை உருவாக்குவோம் என்ற இலக்குடன், அடுத்த கட்ட வளர்ச்சிக்கான முத்தான பத்து திட்டங்களை முன்வைத்து லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்கள் காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட சாமிப்பிள்ளை தோட்டம் அன்னை இந்திரா நகர், விஷ்ணு நகர், ராஜீவ் காந்தி நகர், வாஞ்சி நாதன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
காமராஜ் நகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மகளிர் மலர்கள் தூவி அவரை வரவேற்று ஆதரவை வெளிப்படுத்தினர்.
அப்போது, “உங்களை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” என்று பொதுமக்கள் உறுதியளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் சுரேஷ், பரப்புரை செயலாளர் நடிகர் தாடி பாலாஜி, தொண்டர் அணி தலைவர் மதன், இளைஞர் அணி துணை தலைவர் ஜாகிர் உசேன், விஷ்ணு, மூத்த உறுப்பினர் பாலு, மாங்குடி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp